search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜேம்ஸ் ஆண்டர்சன்"

    • இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார்.
    • இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக ரிஷி சுனக் இருந்து வருகிறார். இந்திய வம்சாவளியான இவர் கிரிக்கெட்டை அதிகம் விரும்பக் கூடியவர்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன் வலை பயிற்சியிலும் ஈடுபட்டார். ஆண்டர்சன் பந்து வீச ரிஷி சுனக் பேட்டிங் செய்துள்ளார். மேலும், தன்னை பந்துவீசி போல்டாக்கிய நபரை அழைத்துப் பாராட்டும் தெரிவித்தார் ரிஷி சுனக்.

    இதுதொடர்பான வீடியோவை பிரதமர் ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கிராலி 79 ரன்கள் அடித்து அவுட்டனார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஷ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டுக்கும் வீழ்த்தினர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்திய அணி 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இப்போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்தார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளும், பும்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுக்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    இந்திய அணியில் அஸ்வினும், இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவும், இந்த டெஸ்ட் போட்டியில் மூலம் தங்களது 100-வது டெஸ்டில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டத்தில் இந்தியா 4 ரன்கள் சேர்ப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
    • இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் சேர்த்திருந்தது.

    குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும், பும்ரா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. குல்தீப் யாதவ் மேலும் 3 ரன்கள் அடித்து 30 ரன்னில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பும்ரா 20 ரன்னில் ஸ்டம்பிங் ஆக இந்தியா 477 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று மேலும் 4 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.

    • 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
    • தரம்சாலா டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 698 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். 700 என்ற மிகப்பெரிய இலக்கை எட்ட இரண்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டியிருந்தது.

    நேற்று சுப்மன் கில்லை வீழ்த்தியிருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் குல்தீப் யாதவை 30 ரன்னில் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

    முத்தையா முரளீதரன், ஷேன் வார்னே ஆகியோருக்குப் பிறகு 700 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் கைப்பற்றி 2-வது இடத்தில் உள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் 21 வருடங்களுக்கு முன் ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
    • விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

    முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

    இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

    அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 332 ரன்கள் தேவை.
    • தங்களுடைய அதிரடி ஆட்ட அணுகுமுறை மூலம் இலக்கை தொட முயற்சிப்போம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணிக்கு 332 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.

    இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. 180 ஓவர்கள் வீசப்படலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக களத்தில் நின்றாலே வெற்றி பெற்றுவிடலாம். ஆனால், 60 முதல் 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம் என ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியதாவது:-

    சனிக்கிழமை இரவு எங்களுடைய பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் 600 டார்கெட் என்றாலும் கூட அதை நாம் துரத்த வேண்டும் என்றார். இது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெளிவான ஒன்றை உணர்த்தியுள்ளது. அது என்னவென்றால், நாளை (இன்று) நாங்கள் டார்கெட்டை தொட முயற்சிப்போம் என்பதுதான்.

    இன்னும் 180 ஓவர்கள் மீதம் உள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் 60 அல்லது 70 ஓவர்களில் இலக்கை எட்ட முயற்சிப்போம். நாளைய எங்களது ஆட்டத்தில் மாற்றம் இருக்காது. அது வெற்றியாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி. எங்களுடைய வழியில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்" என்றார்.

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது.
    • வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.

    2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஜேக் லீச் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக சோயிப் பஷீர் இடம் பிடித்துள்ளார்.

    • பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
    • நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வருகிற 30-ந்தேதி 41-வது வயது பிறக்கிறது. இதுவரை 182 டெஸ்டில் விளையாடி 689 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் ஆடி 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

    இதனால் இன்றைய கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள ஆண்டர்சன்,'இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன்.

    தொடர்ந்து எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஒவ்வொருவருக்கும் சறுக்கல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

    • பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

    டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார்.

    மேலும் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம், 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும் ரோகித் சர்மா 7 -வது இடத்திலும் இடத்திலும் உள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20-ல் 18 என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார்.
    • ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

    அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.

    அதே சமயம் சொந்த மண்ணில் ஆடும் 100-வது டெஸ்டாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 100 டெஸ்டுகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் இந்திய மண்ணில் 94 டெஸ்டுகளும், வெளிநாடுகளில் 106 டெஸ்டுகளும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.
    • அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது. ஒல்லி போப் 145 ரன்னிலும், ஜோ ரூட் 176 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.

    14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 284 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இந்நிலையில், நியூசிலாந்து அணியின் டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 650 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

    அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 708 விக்கெட்டுகளுடன் ஷேன் வார்ன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

    ×